செவ்வாய், 29 ஜூன், 2010

தொடர்பாடல் முறைகள்

தொடர்பாடல் முறைகள்

உணவறிந்து உண்

உணவறிந்து உண்

சுற்றுலா

சுற்றுலா

வீட்டுத்தோட்டம்

வீட்டுத்தோட்டம்

பாரி மகளிர்

பாரி மகளிர்

மறப்பேனா?

மறப்பேனா?

யாழ்ப்பாணத் தமிழரசு

யாழ்ப்பாணத் தமிழரசு

கொண்டாட்டங்கள்

கொண்டாட்டங்கள்

தமிழீழ நாடும் விடுதலைப் போராட்டமும்

தமிழீழ நாடும் விடுதலைப் போராட்டமும்

நாட்டார் பாடல்கள்

நாட்டார் பாடல்கள்

எழில் கொஞ்சும் மயிலாடுமலை

எழில் கொஞ்சும் மயிலாடுமலை

மூட ஆமை

குளம் ஒன்றில் ஆமையும்.....

தாயகத்தில் ஒரு குடும்பம்

தாயகத்தில் ஒரு குடும்பம்
பாடம் தொடரும்...

தமிழ்ச் செல்வம் ஆகமாட்டாயா?

தமிழ்ச் செல்வம் ஆகமாட்டாயா?

துன்பம் நேர்கையில் யாழெ டுத்துநீ....

மாமன்னன் எல்லாளன்

மாமன்னன் எல்லாளன் இலங்கையை எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தான்?
எல்லாள மாமன்னன் நாற்பத்து நான்கு ஆண்டுகள் இலங்கையை ஆண்டான்.

எல்லாளன் கட்டிய பெலிவாவி இன்று எப்படி அழைக்கப்படுகிறது?

எல்லாளனது ஆட்சியில் நாடு எப்படித் திகழ்ந்தது?

மாமன்னன் எல்லாளனைத் துட்டகெகுனு எவ்வாறு கொன்றான்?

துட்டகெமுனுவும் பௌத்தபிக்குமாரும் போருக்கான முழக்கமாக எதை முன் வைத்தனர்?

எல்லாளனுக்காக நினைவிடத்தைத் துட்டகெமுனு எந்த இடத்திலே அமைத்தான்?

சொல்லியங்களில் எழுவாய் பயனிலை செயற்படுபொருள் ஆகியவற்றைக் கண்டறிக.
1. எழுவாய்:எல்லாள மாமன்னன்
2. பயனிலை:ஆண்டான்
3. செயற்படுபொருள்:இலங்கையை

தமிழர் பண்பாடு

தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு


என்ற பாடல் அடிகளை நாமக்கல் கவிஞர் பாடினார்.

பள் - பண் - பண்படு - பண்பாடு
மண்ணைப் பண்படுத்துவது போல் மனதை பண்படுத்துவதே பண்பாடாயிற்று. பண்ணைகள் நிறைந்த இடம் ஊர் எனப்பட்டது. ஊர்மக்களிடம் பண்பாடு நிறைந்திருக்கும்.

ஒப்புநோக்கிப் பார்க்க,
பண்படு - பண்பாடு
கூப்பிடு - கூப்பாடு
சாப்பிடு - சாப்பாடு. இவ் எடுத்துக்காட்டு மாணவன் கூறியது.

நகு (மெல்லிய பல்லைக்காட்டி புன்னகைத்தல்)
நகு - நகர் - நகரகம் - நகரிகம் - நாகரிகம்
வெண்பூச்சுகளால் அமைக்கப்பட்ட இருப்பிடங்கள் மாட மாளிகைகள் கோயில் கோபுரங்கள் அமைந்த இடத்தை நகர் என்றனர்.அங்கு தோன்றியதே நாகரிகம்.அறிவியலில் நோக்கின் அவை உண்மையே!

குறிப்பு:
பண்பாடு மாறாத் தன்மை கொண்டது.மனத்தின் உயர் பண்புகள் மனிதவாழ்வில் மாறாதது.
நாகரிகம் மாறும் தன்மையுள்ளது
. மக்கள் கூட்டத்தில் உணவு, உடை, உறையுள்(தங்குமிடம்) உலகத்தில் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே போகும்.

இனி,
பாடநூல் கட்டுரையைக் கவனிப்போம். தமிழர் பண்பாடு பற்றிக் கூறிய கட்டுரையிலிருந்து சொற்களுக்கு பொருள் விளக்கம்.

விழுமியங்கள் - சிறப்பியல்புகள்
விலங்குகள் - மிருகங்கள்
புலால் - இறைச்சி வகை (துர்நாற்றம் தரக்கூடியன)
மரவுரி - மரப்பட்டை
உறையுள் - தங்குமிடம்
வியக்கத்தகு - ஆச்சரியம்
மானம் - பெருமை( மன் - மான் - மானம்), குற்றம் ( மால் - மான் - மானம் (கருமை - குற்றம்).
கவரிமா - மானை ஒத்த விலங்கு
வள்ளல் - கொடையாளி
ஈகை - கொடை
கொடை - அள்ளிக்கொடுத்தல்

திருக்குறள்களும் அதற்குப் பொருள்களும்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.


மயிர்/நீப்/பின் வா/ழாக் கவ/ரிமா வன்/னார்
உயிர்/நீப்/பர் மா/னம் வரின்.

மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்.


பொருள்: தமிழர் பண்பாட்டில் தலைசிறந்தது மானம். மானம் என்பது ஒருவன் தன் நிலையிலிருந்து தாழாதிருப்பது; தாழ்வு வரும் போது உயிர்வாழாதிருப்பது. தமிழர் மானமிழந்து உயிர் வாழ விரும்பமாட்டார்.

அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையார்
என்பு முரியர் பிறக்கு.


அன்/பிலா ரெல்/லாந் தமக்/குரி/ய ரன்/புடை/யார்
என்/பு முரி/யர் பிறக்கு.

அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார்
என்பும் உரியர் பிறக்கு.


பொருள்: அன்பு இல்லாதவர் எல்லாம் தமக்கே என்றே வாழ்வர் ஆனால் அன்பு உள்ளவரோ உடலுக்கு உரித்தாய் உள்ள எலும்பைப் போல தம்மை எல்லா உயிருக்கும் உரியர் என்று எண்ணி மனிதர்களாய் வாழ்வர்.

ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.


ஒழுக்/கம் விழுப்/பம் தர/லாம் ஒழுக்/கம்
உயி/ரினும் ஓம்/பப் படும்.

ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

பொருள்: ஒழுக்கமானது சிறப்பைத் தருவது ஆதலால் ஒழுக்கம் உயிரை விட மேலானது என்ப.

ஒருவர் எத்துணை உயர் அறிவு பெற்றிருப்பினும், மக்கட் பண்பு உடையவராக வாழ்ந்தாலே அவருக்குச் சிறப்புத் தருவதாகும். அன்றேல் (இல்லையேல்), அவர் ஆறறிவு படைத்தவராயினும், ஓரறிவுள்ள மரத்துக்கு ஒப்பாக கருதப்படுவர்.

ஒழுக்கத்தால் சிறந்தவரைத் தமிழர், 'சான்றோர்' எனப் பாராட்டி மகிழ்ந்தனர்.

கேள்விகளுக்கு பதிலைக் கூறியும் எழுதியும் பழகுக.

1.நாகரிகம் என்ற சொல் குறித்து நிற்பது யாது?
2.'பண்பாடு' என்பது விளக்குவது யாது?
3.தமிழ்மக்களின் கொடைப்பண்பு எத்தகையது?
4.சான்றோர் எனப்படுபவர் யாவர்?
5.கணைக்கால் இரும்பொறையின் மான உணர்வை விளக்கும் நிகழ்ச்சி யாது?
6.குமணனின் ஈகைப் பண்பை விளக்கும் வரலாற்று நிகழ்ச்சியை எழுதுக.

பழமொழியைக் கூறிப்பழகுவோம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அகம் = உள்ளம், மனம், சிந்தை.
மனத்தில் உள்ளதை அப்படியே காட்டக் கூடியது முகம். அதனாலேயே இப்பழமொழி தோன்றிற்று.

மறைமொழி

அட்டாலும் பாற்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

அட்டாலும் - காய்ச்சினாலும், குன்றா - குன்றாது, அளவளாய் - ஒன்றுபட்டு, நட்டாலும் - நட்புக் கொண்டாலும், நண்பல்லார் (நண்பல்லர்) - நட்பில்லாதவர், கெட்டாலும் - ஏழ்மை, மேன்மக்கள் - உயர்ந்தோர், சுட்டாலும் - சுடுவது.

பாலை எவ்வளவு காய்ச்சினாலும் அதன் சுவை முன்றாது. சங்கைச் சுட்ட போதிலும், அது வெண்மை நிறமாகவே இருக்கும். அவை போல பண்புடைய மேலோர்கள் வறுமையால் துன்புற்ற போதிலும், பெருந் தகைமையோடு இருப்பார்கள். பண்பு இல்லாதவர்கள் நண்பர்களாக இருந்த போதிலும், நல்லவர்களாக இருக்க மாட்டார்கள்.

சங்கு.

சனி, 13 மார்ச், 2010

எழுத்து

எழுத்து

பேசும்போது ஒலிவடிவாகவும் எழுதும் போது வரிவடிவாகவும் மொழி அமையும். தமிழ் எழுத்துகளை முதலெழுத்து சார்nhழுத்து என இரண்டாக வகைப்படுத்துவர்.

முதலெழுத்து

முதலெழுத்த என்பது தமிழ்மொழியில் வழங்கும் அடிப்படையான ஒலிகளையும் அவற்றின் வரிவடிவங்களையும் குறிக்கும் எழுத்தகளாகும்.

துமிழ்மொழியிலுள்ள முதலெழுத்தகள் முப்பது ஆகும்.
அவையாவன:

உயிரெழுத்துகள் - 12
மெய்யெழுத்தகள் - 18

உயிரெழுத்துகள்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள

என்னும் பன்னிரண்டு எழுத்துகளும் உயிரெழுத்துகள் ஆகும்.

உயிரெழுத்துகள் இருவகைப்படும்.

குற்றெழுத்துகள் - 5 (குறில்)
நெட்டெழுத்துகள் - 7 (நெடில்)

குற்றெழுத்துகள்

அ, இ, உ, எ, ஒ என்பன குற்றெழுத்துகள் ஆகும்.
அவை ஒலிக்க எடுக்கும் கால அளவு ஒரு கைந்நொடிப் பொழுதாகும்.

நெட்டெழுத்துகள்
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்பன நெட்டெழுத்துகள் ஆகும். ஆவை ஒலிக்க எடுக்கும் கால அளவு இரண்டு கைநொடிப் பொழுதாகும்.

மெய்யெழுத்தகள்

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
என்னும் பதினெட்டு எழுத்துகளும் மெய்யெழுத்துகளாகும். மெய்யெழுத்துகளுக்கு உடலெழுத்துகள் அல்லது ஒற்றெழுத்துகள் என்னும் பெயர்களும் உண்டு.


மெய்யெழுத்துகள் மூன்று வகைப்படும்.

வல்லெழுத்துகள் - 6 – வல்லினம்
மெல்லெழுத்துகள் 6 – மெல்லினம்
இடையினம் - 6 - இடையினம்

வல்லினம்

க் ச் ட் த் ப் ற் என்பன வலிமையாக ஒலித்தலால் வல்லின எழுத்துகள் எனப்படும்

மெல்லினம்

ங் ஞ் ண் ந் ம் ன் என்பன மென்மையாக ஒலித்தலால் அமல்லின எழுத்துகள் எனப்படும்.

இடையினம்

ய் ர் ல் வ் ழ் ள் என்பனவற்றின் வல்லொலியாகவும் இன்றி மெல்லொலியாகவும் இன்றி இடையில் ஒலித்தலால் இடையின எழுத்துகள் எனப்படும்.

சார்பெழுத்து

உயிரெழுத்துகள் பன்னிரண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டும் ஒன்றுடன் ஒன்று புணர்ந்து இருநூற்றுப்பதினாறு உயிர்மெய்யெழுத்துகள் உருவாகும். ஊயிர்மெய்யெமுத்துகளும் ஆய்த எழுத்தும் சார்பெழுத்துகள் ஆகும்.

பலுக்குதல் ( உச்சரித்தல் )

ல, ள, ழ ஒலி வேறுபாடு

லகர, ளகர, ழகர வேறுபாடு

லகரம் பலுக்குதல் ( உச்சரித்தல் )

முன்புற நாக்குத் தடித்து மேல்வாய்ப் பல்லின் அடியைப் பொருத்த ல
ஓசை பிறக்கும்.

முயல்க: வெல்லம், வேலை, தாலாட்டு, வல்லி


ளகரம் பலுக்குதல் ( உச்சரித்தல் )

முன்புற நாக்குத் தடித்து மேல்வாயின் முன்புறம் தடவ ள ஓசை பிறக்கும்.

முயல்க: குளம், வெள்ளம், வேளை, வேள், பள்ளி


ழகரம் பலுக்குதல் ( உச்சரித்தல் )

மேல்வாயை நாக்கின் நுனி தடவ ழ ஒலி பிறக்கும்

முயல்க: வாழ்க, பழம், சூழல்

ந, ன, ண ஒலி வேறுபாடு

தன்னகர, னன்னகர, ணகர வேறுபாடு

தன்னகரம் பலுக்குதல் (உச்சரிக்குதல்)

நுனி நாக்கு மேல்வாய்ப் பல்லின் அடியில் பொருந்துவதால் ந ஒலி பிறக்கும்

முயல்க: பெறுநர், நன்கை, நாக்கு


னன்னகரம் பலுக்குதல் (உச்சரிக்குதல்)

மேல்வாயை நாக்கின் நுனி மிகப் பொருந்த ன ஒலி பிறக்கும்

முயல்க: அன்னம், பன்னதல், வன்மை


ணகரம் பலுக்குதல் (உச்சரிக்குதல்)

நுனி நாக்கு மேல்வாயின் நடுவில் தொட ண ஒலி பிறக்கும்

முயல்க: அண்ணம், வண்ணம், கிண்ணம்

ர ற ஓசை பலுக்குதல் ( உச்சரித்தல்)

ரகரம் பலுக்குதல்

நக்கின் நுனி மேல்வாயின் முன் புறத்தைத் தொட ர ஒலி பிறக்கும்.

முயல்க: மரம், தகரம், பம்பரம்


றகரம் பலுக்குதல்

மேல்வாயின் நடுப்பாகத்தை நாக்கை வளைத்துத் தொட்டு உச்சரிக்க ற ஒலி பிறக்கும்

முயல்க: முற்றம், பற்று, மறம்

தனிவாக்கியம்,தொடர் வாக்கியம்

தனிவாக்கியம்

ஓர் எழுவாயின் முற்றுப்பெற்ற ஒரேடியாரு செயலை மாத்திரம் கூறும் வாக்கியம் தனிவாக்கியமாகும்.
எ-கா:
1. அ) கிளி மாமரத்தில் இருந்தது
ஆ) கிளி மாம்பழத்தைக் கொத்தியது

2. அ) உழவர்கள் வயலை உழுதார்கள்.
ஆ) உழவர்கள் நெல்லை விதைத்தார்கள்.
இ) உழவர்கள் விளைந்த நெல்லை அறுவடை செய்தார்கள்.

தொடர் வாக்கியம்

தனித்தனியாக இயங்கக் கூடிய ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள், பல குறைவினைகளையும் ஒரு வினைமுற்றையும் கொண்டு முடிவது தொடர்வாக்கியமாகும்.
எ-கா:
1. கிளி மாமரத்திலிருந்து மாம்பழத்தைக் கொத்தியது.

2. உழவர்கள் வயலை உழுது, நெல்லை விதைத்து, விளைந்த நெல்லை அறுவடை செய்தார்கள்.

வாக்கிய வகைகள் ( கூற்று, வினா )

வாக்கிய வகைகள் ( கூற்று, வினா )

கூற்று வாக்கியம்

செய்தியைக் கூறும் நோக்குடன் அல்லது ஓர் உண்மையை உறுதிப்படுத்திக் கூறும் நோக்குடன் அமைவது கூற்று வாக்கியமாகும்.
எ-கா:
1.குமரன் சந்தைக்குச் சென்றான்
2.நேற்று முழுவதும் மழை பெய்தது.

வினா வாக்கியம்
ஒரு கருத்தை அல்லது ஒரு நிகழ்வை அறியும் நோக்குடன் வினவுவதாக அமைவது வினா வாக்கியமாகும்.
எ-கா:
1.இன்று வீட்டுக்கு வருவாயா?
2.உங்கள் ஊரில் தைப்பொங்கல் விழா நடந்ததா?

சேர்த்தெழுதல், பிரித்தெழுதல்

சேர்த்தெழுதல், பிரித்தெழுதல்

சேர்த்தெழுதல்

எ-கா:

தமிழ் + பாட்டு = தமிழ்ப்பாட்டு
தமிழ் + ஆர்வம் = தமிழார்வம்
இருநூறு + ஐம்பது = இருநூற்றைம்பது
பால் + சோறு = பாற்சோறு
இடை + இடையே = இடையிடையே
வெண்மை + நிறம் = வெண்ணிறம்

பிரித்தெழுதல்

எ-கா:
கடுங்குளிர் = கடுமை + குளிர்
மறைவிடம் = மறைவு + இடம்
ஒவ்வொன்று = ஒன்று + ஒன்று
ஆற்றங்கரை = ஆறு + கரை

வினைச்சொல் காலங் காட்டுதல்

வினைச்சொல் காலங் காட்டுதல்

வினைச்சொல் செயலை உணர்த்தும். வினைமுற்றுகள் பெரும்பாலும் இடைநிலைகளால் காலங் காட்டும். விகுதியாலும், பகுதி இரட்டித்தும் காலங் காட்டுவதுமுண்டு. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எனக் காலம் மூன்று வகைப்படும்.

இறந்தகாலம் - இதன் இடைநிலைகள் ட், த், ற், இன், ன்

எ-கா:
உண்டான் - உண் - ட் - ஆன்
செய்தான் - செய் - த் - ஆன்
கற்றாள் - கல் - ற் - ஆள்
ஓடின – ஓடு - இன் - அ
போனான் - போ – ன் - ஆள்

நிகழ்காலம் - இதன் இடைநிலைகள் கிறு, கின்று, என்பனவாகும்.
எ-கா:
செய்கிறாள் - செய் - கிறு – ஆள்
உண்கின்றாள் - உண் - கின்று – ஆள்

எதிர்காலம் - இதன் இடைநிலைகள் ப், வ் என்பனவாகும்.
எ-கா:
உண்பான் - உண் - ப் - ஆன்
செய்வான் - செய் - வ் - ஆன்

வினைமுற்றுகள் யாவும் மூன்று காலங்களுக்கும் உரியனவாய் உள்ளன. சிறுவர்கள் பாட்டுப் பாடினார்கள், சிறுவர்கள் பாட்டுப் பாடுகின்றார்கள், சிறுவர்கள் பாட்டுப் பாடுவார்கள் எனும் போது, பாடு என்னும் வினையடியிலிருந்து பிறக்கும் வினைமுற்றுகள் மூன்று காலங்களிலும் வந்துள்ளமையை அறியலாம்.

வினைச்சொற்கள்

வினைச்சொற்கள்

வினைச்சொல்

ஒரு பொருளை உணத்துவது பெயர்ச்சொல். ஆப்பொருளின் செயலை உணத்துவது வினைச்சொல் ஆகும். அது காலத்தைக் காட்டும்;@ திணை, பால், எண், இடம், ஆகியவற்றைத் தெரிவிக்கும்

எ-கா:

நடந்தான், நின்றார்கள், அறிவார், வந்தன, படித்தாள், கூடின, நினைத்தேன், வருவாய்

காலம்

காலம் மூன்று வகைப்படும்.

அவையாவன:

இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்

இறந்தகாலம்
நிகழ்ந்து முடிந்த செயலைக் குறிப்பது இறந்தகாலம் எனப்படும்.
எ-கா:
ஓடினான், நடந்தான், படித்தனர், குடித்தது

நிகழ்காலம்
நிகழ்ந்து கொண்டிருக்கும் செயலைக் குறிப்பது நிகழ்காலம் எனப்படும்.
எ-கா:
ஓடுகின்றாள், நடக்கினு;றான், படிக்கின்றனர், குடிக்கின்றது

எதிர்காலம்
இனிமேல் நிகழவிருக்கும் செயலைக் குறிப்பது எதிர்காலம் எனப்படும்.
எ-கா:
ஓடுவாள், நடப்பான், படிப்பர், குடிக்கும்

பெயர்ச்சொல்

பெயர்ச்சொல்

ஐம்புலன்களால் உணரக்கூடியதும் உள்ளத்தால் அறியக்கூடியதுமான பொருள்களைக் குறிப்பது பொயர்ச்சொல் எனப்படும். பேயர்ச்சொல் அறுவகைப்படும்.

அவையாவன:

பொருட்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
குணப்பெயர்
தொழிற்பெயர்

பொருட்பெயர்
ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் எனப்படும்.
எ-கா:
பெட்டகம், பந்து, கண்ணன், மரம், கோழி

இடப்பெயர்
இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்பெயர் எனப்படும்.
எ-கா
கண்டி, யாழ்ப்பாணம், பள்ளி, நூலகம்

காலப்பெயர்
காலத்தின் பெயரைக் குறிப்பது காலப்பெயர் எனப்படும்.
எ-கா:
செவ்வாய், இரவு, பகல், ஆண்டு, கோடை

சினைப்பெயர்
ஒன்றின் பகுதிப் பொருளை அல்லது உறுப்பைக் குறிப்பது சினைப்பெயர் எனப்படும்.
எ-கா:
கண், மூக்கு, வாய், தலை, வேர், பூ, இலை

குணப்பெயர்
ஒரு பொருளின் நிறம், சுவை, உணர்ச்சி, வடிவம், போன்றவற்றின் பண்புகளைக் குறிப்பது குணப்பெயர் எனப்படும்.
எ-கா:
அன்பு, நன்மை, புளிப்பு, இனிமை, வட்டம், கறுப்பு

தொழிற்பெயர்
தொழிலின் பெயரைக் குறிப்பது தொழிற்பெயர் எனப்படும்.
எ-கா
ஓடுதல், சிரித்தல், விளையாடுதல், படித்தல்

ஒரு பொருட் பன்மொழி

ஒரு பொருட் பன்மொழி

ஒரு பொருளைத் தரும் பல சொற்கள் ஒரு பொருட் பன்மொழி எனப்படும். அதாவது பல சொற்கள் ஒரு பொருளைக் குறிப்பதாகும்.

எ-கா:

பொழில், பொதும்பர், கா என்ற சொற்கள் மூன்றும் சோலை என்னும் ஒரு பொருளைக் குறிப்பதாகும்.

வீடு - இல்லம், உறையுள், மனை
இன்பம் - உவகை, மகிழ்ச்சி, களிப்பு
அழகு – அணி, வடிவு, வனப்பு, எழில், கவின்
துயில் - துஞ்சல், உறக்கம், தூக்கம்
கதிரவன் - வெய்யோன், பகலவன், ஞாயிறு, பரிதி
நிலா – மதி, திங்கள், அம்புலி

பல பொருள் தரும் ஒரு சொல்

ஒரு சொல் பல பொருளையோ அல்லது கருத்தையோ தரலாம். இத்தைய சொல் பல பொருள் ஒரு மொழி எனப்படும்.

எ-கா:

அகம் - வீடு, உள்ளம்
ஆறு – நதி, வழி, ஒழுக்கம், ஓரெண்
வாரணம் - யானை, சேவல், சங்கு
மா – மாமரம், குதிரை, விலங்கு, பெரிய
விடை – பதில், எருது

அகம் என்னும் சொல் வீடு, உள்ளம் போன்ற பல பொருளைத் தருகிறது. அதாவது ஒரு சொல் பல பொருளைத் தருகின்றது.

எழுவாய், பயனிலை

எழுவாய், பயனிலை

எழுவாய்

வாக்கியத்தில் கருத்துத் தொடங்கும் சொல் எழுவாய் ஆகும்.
எழுவாய் என்பதற்குத் தோன்றும் இடம் என்பது பொருள.;

எ-கா: குமரன் படிப்பில் திறமையுள்ளவன்
குமரன் - எழுவாய்

பயனிலை
வாக்கியத்தின் கருத்தை முடிக்கும் சொல் பயனிலை ஆகும்.

எ-கா: கபிலன் பாட்டுப் பாடினான்.
பாடினான் - பயனிலை

எழுவாயும் பயனிலையும்

எ-கா: மதிவண்ணணன் காலையில் எழுந்தான்.
மதிவண்ணன் - எழுவாய்
எழுந்தான் - பயனிலை

பெம்பாலும் எழுவாய்ச் சொல் வாக்கியத்தின் முதலில் வரும். ஆயினும், அது இடம் மாறி வருதலுமுண்டு.

எ-கா: காலையிலே கதிரவன் உதிக்கின்றான்.
கதிரவன் - எழுவாய்

பயனிலைச் சொல் பெரும்பாலும் வாக்கியத்தின் இறுதியிலே வரும். சில இடங்களில் மாறியும் வரும். புயனிலையை அறிந்தபின் பயனிலைச் சொல்லுடன் யார்? எது? எவை? முதலிய சொற்களில் ஏற்றதொன்றைச் சேர்த்து, வினவினால் எழுவாயை அறியலாம்.

எ-கா:

கலைமகள் ஓவியம் வரைந்தாள்
வரைந்தாள் என்னும் பயனிலையுடன் யார்? என்னும் வினாச் சொல்லைச் சேர்த்து, யார் வரைந்தாள்? என வினவினால் கலைமகள் என்பது விடையாக வரும். அதுவே எழுவாயாகும்.

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்

வாக்கியத்தில் எழுவாய் பயனிலை ஆகிய இரு உறுப்புகள் பற்றி முன்பு கற்றீகள். வாக்கியங்களில் எழுவாய் பயனிலையுடன் செயற்படுபொருள் என்றொரு உறுப்பும் இடம்பெறும்.

எ-கா: மங்கை எலுமிச்சம்பழச்சாற்றைப் பருகினாள். இந்த வாக்கியத்தின் பயனிலை பருகினாள். எதைப் பருகினாள்? என்ற வினாவுக்கு எலுமசை;சம்பழச்சாறு விடையாக வரும். எனவே, எலுமிச்சம்பழச்சாறு செயப்படுபொருளாகும்.

எண்

எண்:
எண்ணிக்கை அடிப்படையில் எண் ஒருமை, பன்மை என இருவகைப்படும்.

ஒருமை:
ஒன்றை, ஒருவரைக் குறிப்பது ஒருமை.

எ-கா: பூனை, பூ, மலை, அது, சிறுவன், ஓவியன், தோழி

பன்மை:

எ-கா: பூனைகள், பூக்கள், மலைகள், அவை, சிறுவர்கள், ஓவியர்கள்

இடம்:
தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் நிலைகள் இடவகைகள் ஆகும்.

தன்மை
தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் குறிப்பது தன்மை இடம்.

எ-கா: நான், யான், நாம், யாம், நாங்கள்

முன்னிலை
முன் நிற்பவரைக் குறிப்பது முன்னிலை இடம்.

எ-கா: நீ, நீர், நீயிர், நீவிர், நீங்கள்

படர்க்கை:
தன்மை முன்னிலை நீங்கிய மற்றையவை படர்க்கை இடம்.

எ-கா: அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, பொன், மன்னன், சேவல்

திணை

திணை:

திணை என்பதற்கு வகை என்று பெருள்.
திணை இருவகைப்படும்

அவையாவன,
உயர்தினை, அஃறிணை

உயர்திணை:
மக்களைக் குறிக்கும் சொல் உயர்திணையாகும். மக்களை விட உயர்ந்தவராகக் கருதப்படும் தேவர்களும் உயர்திணையாகும்.

எ-கா: வேலன், குழலி, இறைவன்

அஃறிணை
மக்கள் அல்லாத உயிருள்ள, உயிரற்ற அனைத்தும் அஃறிணை ஆகும்.

எ-கா: மரம், கணினி, கோழி, கல்

பால்:

பால் என்பது திணையின் உட்பிரிவாகும்.

உயிர்திணையில் ஆணைக் குறிப்பது ஆண்பால்.

எ-கா: தலைவன், அவன், செல்வன், மாலன், மாணவன், சிறுவன்

உயிர்திணையில் பெண்ணைக் குறிப்பது பெண்பால் ஆகும்.

எ-கா: தலைவி, அவள், செல்வி, தங்கை, மாமி, கோதை, சிறுமி

ஆண் பெண் இருபாலாரிலும் பலரைக் குறிப்பது பலர்பால் எனப்படும்.

எ-கா: தலைவர்கள், அவர்கள், குறவர்கள், மாணவர்கள், நண்பர்கள்

அஃறிணையில் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி ஒன்றைக் குறிப்பது ஒன்றன்பால் எனப்படும்.

எ-கா: அது, நாய், கல், இலை, வீடு, மணிக்கூடு, கதவு, கப்பல்,

அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் எனப்படும்.

எ-கா: அவை, நாய்கள், கற்கள், இலைகள், வீடுகள், குதிரைகள்

சனி, 13 பிப்ரவரி, 2010

வீக்கிங்

கட்டுரை எழுதுவோம் தலையுறுப்பு " வீக்கிங்கர்"வீக் - ( vik )

வீக்கிங் என்ற சொல், வீக் என்கின்ற நோர்வேசியச் சொல்லில் இருந்து பிறந்தது. நோர்வேசிய மொழியில் ( ஏமை- வீக் ) என்றால் கடல் அல்லது ஆற்றின்கரையிலி ருந்து தரைப்பகுதிக்குள் நீட்டிக் கொண்டிருக்கும் சிறிய கடல் அல்லது ஆற்றுப்படுக்கையைக் குறிக்கும்.

வீக்கிங்காலம் ( vikengtid )

வீக்கிங்காலம் எனப்படுவது, வரலாற்றிலே கி.பி 800 ஆம் ஆண்டிலிருந்து கி.பி 1050 ஆம் ஆண்டுவரையான சுமார் 250 ஆண்டு காலப்பகுதியைக் குறிக்கிறது. வீக்கிங் என்ற சொல் அக்காலப்பகுதியில், கண்டிநேவியாவில் ( Skadinevia ) (நோர்வே, சுவீடன், டென்மார்க்) வாழ்ந்த மக்கள் கூட்டத்தைக் குறிக்கிறது. அக்காலத்தில் எழுந்த நூல்களில், வீக்கிங் ( Viking) மக்கள் மிகக் கொடூரமானவர்களாகவே சித்தரிக்கப் படுகின்றனர். அக்காலத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையானவர்களே கல்வியறிவு உள்ளவர்களாக, மற்றும் நூலாசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். அத்தோடு அவர்கள் அக்காலத்தில் இருந்த கிறித்துவ தேவன் கோயில்களில் மதகுருக்களாக இருந்திருக்கிறார்கள். இந்த மதக்குருக்களால் வீக்கிங்கைப் பற்றி எழுதிய நூல்களில், வீக்கிங் மக்கள் மிகக் கொடூரமானவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் வீக்கிங்கினர் அக்காலத்தில் பல கிறித்துவ தேவன் கோயில்களையும் கிறித்துவக் குருமடங்களையும் தாக்கி அழித்து அவற்றிலிருந்த பெறுமதி மிக்க அரிய பொருட்களைக் கொள்ளையிட்டுக் கொண்டு சென்றனர். இதனால் அக்காலத்தில் எழுந்த நூல்கள் வீக்கிங் மக்களை காட்டுமிராண்டிகளாகவே வர்ணிக்கிறது. எனினும் பிற்காலத்திலும், தற்காலத்திலும் எழுந்த வரலாற்று ஆய்வு நூல்கள் வீக்கிங் காலத்தை கண்டிநேவியாவின் பொற்காலம் என்றும், வீக்கிங் மக்களை பல்வேறு தனித் திறமை கொண்ட மக்களாகவும், ஸ்கண்டிநேவியாவில் பல்வேறு மாற்றங்களும் வளர்சியும் அவர்கள் காலத்திலேயே ஏற்பட்டதாக எடுத்துக் கூறுகின்றன. கொள்ளையிட்டதால் வீக்கிங் மக்கள் கொடூரமானவர்களாக சித்தரிக்கப்பட்டாலும், அவர்களிடம் பல்வேறு திறமைகள் காணப்பட்டன.

அவர்கள் கப்பல் கட்டுவதிலே மிகவும் திறமைசாலிகளாகக் காணப்பட்டுள்ளார்கள். அவர்களது கப்பல்கள் ஆழம் குறைந்த நீர்நிலைகளிலும் பயணம் செய்யலாம். அத்தோடு அவை மிகவும் உறுதியாவை அவற்றால் கொந்தளிக்கும் பெருங்கடலிலும் பயணம் செய்ய முடியும். மேலும் வீக்கிங் மக்கள் மிகச்சிறந்த கடலோடிகள், கப்பலோட்டிகள் மிகப்பரந்து விரிந்து கிடக்கின்ற யுவடயவெiஉ 'அற்லான்ரிக்" வாரினூடாகக் கப்பலைச் செலுத்தி பல்வேறு நாடுகளுக்கும் அவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள். தொலில்நுட்பம் விருத்தியடையாத அக்காலப்பகுதியில், கொந்தளிக்கும் மிகப்பெருங் கடலினூடாக பல்வேறு நாடுகளுக்கும் கப்பல்பயணம் மேற்கொள்ளக்கூடிய அறிவுடையவர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள். வீக்கிங் மக்கள் மிகப் பெரும் வணிகர்களாகவும் விளங்கியிருக்கிறார்கள். பல்வேறு நாடுகளுக்கிடையே பொருட்களை கப்பலிலே ஏற்றிச் சென்று விற்பதிலும் வாங்குவதிலும் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். அக்காலப்பகுதிலேயே கண்டிநேவியா (Skaninevia ) , ஏனைய ஐரோப்பிய நாடுகளோடு மேலதிக நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி, ஐரோப்பியாவின் ஒரு பகுதியாக மாறியது.

வீக்கிங்கினரில் கடல்பயணமும் கடல்கடந்த வணிகமும் கிழக்கிலே ருசியா வரையும், மேற்கிலே அமெரிக்கரையும் தெற்கிலே நடுவன் (மத்திய) கிழக்குவரையும் என்று மிகப்பரந்து கிடந்தது.
இந்த வீக்கிங்கினர் கப்பலிலே வெளிநாடுகள் சென்று மீண்டும் தாய்நாடு திரும்பும்போது பொருட்களையும் செல்வங்களையும் மட்டுமன்றி புதிய சிந்தனைகளையும் கலாச்சார கலை வடிவங்களையும் கொண்டுவந்து சேர்த்தனர்.
இவ்வாறு இவர்கள் வெளிநாட்டில் இருந்து உள்நாட்டிற்கு கொண்டுவந்து சேர்த்ததில் முக்கியமானதாக கிறித்தவ மதத்தைக் குறிப்பிடலாம். வீக்கிங் காலத்திலேயே கிறித்தவ மதம் கண்டிநேவியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கிறித்தவ தேவாலயங்களையும் கிறித்தவ குருமடங்களையும் கொள்ளையிட்டதால், ஏற்பட்ட கிறித்தவ மதத்துடனான தொடர்பு, பின்னர் கிறித்தவ மதக்குருமார்கள் இங்கு வந்து இங்குள்ள மக்களை அம்மதத்தைத் தழுவச் செய்தனர். அதனூடாக இங்கே (நோர்வேயிலே) கிறித்தவ மதம் பரவியது.

வீக்கிங் காலத்திலே கலைகள் நன்கு பேணி வளர்க்கப்பட்டன. வீக்கிங் மக்கள் கலைகளிலே மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கினர். மரங்களிலே கலைவடிவங்களை செதுக்குவதில் வீக்கிங்கினர் திறமைசாலிகள். அவர்கள் வடிவமைத்த கப்பல்களின் முகப்புப் பகுதியில் விலங்குகள் மற்றும் மனிதர்களின் முகங்களை ஒத்த மரத்திலே செதுக்கப்பட்ட உருவங்கள் அழகு தருவதும் அத்தோடு கப்பல் முழுவதும் மரத்தினால் செதுக்கப்பட்ட கலைவடிவங்கள் காணப்படுவது அவர்களின் கலை வெளிபாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
வீக்கிங் காலத்திலே பெண்களுக்கு கூடுதலான உரிமைகள் வளங்கப்பட்டிருந்தன. ஆண்கள் பொதுவாக கப்பலிலே வெளியிடங்களுக்கு பயணம் மேற்கொள்வதால், உள்நாட்டிலே பெண்களுக்கு கூடுதலான உரிமைகள் வளங்கப்பட்டிருந்தன. ஒரு வீட்டிலே அந்தவீடு அதுவுள்ள காணி மற்றும் சொத்துகள் பெண்களின் பெயரிலேயே பதியப்பட்டிருந்தன. சொத்துகள் சம்பந்தமான முடிவுகள் எடுக்கப்படும் போது பெண்களே முடிவுகளை எடுத்தனர். வீட்டில் இருந்த சொத்துகள் யாவிலும் பெண்களே உரித்துடையவர்களாக இருந்தனர். வீட்டு மற்றும் உள்ஊர் அலுவலகங்கள்( நிர்வாகங்கள் ) பெண்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.

வீக்கிங் காலத்தில் வீரத்திற்கு மிகவும் முன்னுரிமை கொடுக்ப்பட்டது. ஆண்கள் யாவரும் மிகவும் வீரம் மிக்கவர்களாக வளர்க்கப்பட்டார்கள். ஆண்பிள்ளைகள் சிறுவயதிலிருந்தே போர்ப்பயிற்சி கொடுக்கப்பட்டு, எந்நேரமும் சண்டையிடுவதற்கும் போருக்குச் செல்வதற்கும் அணியமான ( தயார் ) நிலையில் வைக்கப்பட்டார்கள். எதிரியுடன் சண்டையிட்டு காயப்படுவதும் சண்டையிலே களப்பலியாவதும் பெரும் புனித செயலாகப் போற்றப்பட்டது. வீட்டிலே நோய்வாய்ப்பட்டு, அல்லது அகவை முதிர்ந்து இயற்கை மரணம் எய்வதிலும் பார்க்க, எதிரியுடன் சண்டையிட்டு களத்தில் இறப்பதை பெருமையாக மதித்தார்கள். அவ்வாறு இறப்பதன் மூலம் வீரர்கள் துறக்கம் ( சொர்க்கம் ) அடைவார்கள் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது. பெரும் வீரர்களைப் போற்றுவதும் பின்னர் அவர்களின் கதைகளை பிறங்கடைகளுக்குச் ( தலைமுறையினர் ) சொல்வதும் அவர்களின் வழக்கமாக இருந்தது. ஒருவன் இயற்கை மரணம் அடைந்துவிட்டால், அவன் மார்பிலே வாளினால் கீறி அதிலே காயம் ஏற்படுத்தி பின்னர் அவனைப் புதைப்பார்கள். அதன் மூலம் அந்தவீரன் போரிலே விழுப்புண் அடைந்து இறந்தான் என பொருள்கொள்வார்கள் புதைத்த இடத்திலே வீரனுக்கு நடுகல்லும் நாட்டுவார்கள். அதன்பின் அந்த நடுகல்லைப் போற்றுவார்கள். இவ்வாறு அவர்களின் வீரவரலாறு தொடர்கிறது.

இவ்வாறான வீரவரலாறுகள் பழந்தமிழர் வாழ்விலும் காணப்படுவதை தொல்காப்பியத்திலும் புறப்பாடலிலும் காணலாம். அத்தோடு தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் அம்மரபை கண்டுள்ளோம்.
வீக்கிங் மக்களிடம் உடன்கட்டை ஏறும் வழக்கமும் இருந்திருக்கிறது. அதாவது கணவன் இறந்துவிட்டால் அவனின் மனைவியும் தனது உயிரை மாய்த்துக்கொள்ளுவது. நம் தமிழரும் உடன் கட்டை ஏறுவது பற்றி கதைகள் மூலம் அறிந்திருக்கின்றோம்.

வீக்கிங் காலப்பகுதியில் கண்டிநேவியாவில் ( ளுமயனெiநெஎயை )
தோட்டநிலங்களுக்கு பெரும் தட்டுப்பாடு இருந்தது. வீக்கிங்கினர் மிகச்சிறந்த உழவர்கள் எனினும் பயிற்செய்கை நிலங்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அவர்கள் வேறு நாடுகளை நோக்கி தொழில் நோக்கமாக கடல்கடந்து செல்ல வேண்டி ஏற்பட்டது. இவ்வாறு தொழில் தேடி, வாழ்வாதாரம் தேடி வெளிநாடு சென்றவர்கள், பின்னர் கடற்கொள்ளை, கொள்ளை வணிகம் பேரம்பேசுதல் என்று பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு, ஈற்றில் கண்டிநேவியாவின் ( ளுமயனெiநெஎயை ) வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்ப்படவேண்டிய வீக்கிங் ( ஏமைநn ) காலம் என்ற பொற்காலத்தை ஏற்படுத்தினர். வீக்கிங் காலத்தில் கட்டப்பட்ட கிறித்தவ தேவன் கோயில்கள் மிகப்பெரும் கலைப்பெட்டகங்களாக இன்றும் பேணப்படுகின்றன. வீக்கிங் காலத்தில் கட்டப்பட்ட கலைவடிவம் பொருந்திய கப்பல்கள் இன்றும் அருங்காட்சியகத்தில் வைத்துப் பேணப்படுகின்றன. அத்தோடு அக்காலத்து வீக்கிங் ( ஏமைiபெ ) மக்களின் வாழ்கை முறைகள் தொடர்பான அனைத்து காட்சிமங்களும்; அருங்காட்சியகத்தில் வைத்து பேணப்படுகின்றது. அத்தோடு இன்றும் கட்டப்படுகின்ற புதிய கட்டடங்களிலும் வீக்கிங் ( ஏமைiபெ ) மக்களின் கட்டடக்கலை வடிவங்களை புகுத்துவதிலிருந்து வீக்கிங் ( ஏமைiபெ ) மக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இன்று இயங்கும் பல நிறுவனங்கள் மற்றும் முக்கியமான இடங்களின் பெயர்கள் வீக்கிங் ( ஏமைiபெ ) பெயர்களையே தாங்கி நிற்கின்றன. பல்வேறு குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு, சிறுசிறு நிலப்பரப்புகளாக பிரிந்து கிடந்த நோர்வே ( ழேசபந ) , ஒரே மன்னரின் கீழ் ஒரு மிகப்பெரிய தனி அரசாக உருவெடுத்ததும் வீக்கிங் காலப்பகுதியிலேயே ஆகும்.

இதுவரை கூறியவற்றால் வீக்கிங் காலம் கண்டிநேவியாவின் ( ளுஉயனெiநெஎயை ) பொற்காலம் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.


தொகுப்பும் கட்டுரையும் : தயா. சொக்கநாதன்