சனி, 13 மார்ச், 2010

ஒரு பொருட் பன்மொழி

ஒரு பொருட் பன்மொழி

ஒரு பொருளைத் தரும் பல சொற்கள் ஒரு பொருட் பன்மொழி எனப்படும். அதாவது பல சொற்கள் ஒரு பொருளைக் குறிப்பதாகும்.

எ-கா:

பொழில், பொதும்பர், கா என்ற சொற்கள் மூன்றும் சோலை என்னும் ஒரு பொருளைக் குறிப்பதாகும்.

வீடு - இல்லம், உறையுள், மனை
இன்பம் - உவகை, மகிழ்ச்சி, களிப்பு
அழகு – அணி, வடிவு, வனப்பு, எழில், கவின்
துயில் - துஞ்சல், உறக்கம், தூக்கம்
கதிரவன் - வெய்யோன், பகலவன், ஞாயிறு, பரிதி
நிலா – மதி, திங்கள், அம்புலி

பல பொருள் தரும் ஒரு சொல்

ஒரு சொல் பல பொருளையோ அல்லது கருத்தையோ தரலாம். இத்தைய சொல் பல பொருள் ஒரு மொழி எனப்படும்.

எ-கா:

அகம் - வீடு, உள்ளம்
ஆறு – நதி, வழி, ஒழுக்கம், ஓரெண்
வாரணம் - யானை, சேவல், சங்கு
மா – மாமரம், குதிரை, விலங்கு, பெரிய
விடை – பதில், எருது

அகம் என்னும் சொல் வீடு, உள்ளம் போன்ற பல பொருளைத் தருகிறது. அதாவது ஒரு சொல் பல பொருளைத் தருகின்றது.