ல, ள, ழ ஒலி வேறுபாடு
லகர, ளகர, ழகர வேறுபாடு
லகரம் பலுக்குதல் ( உச்சரித்தல் )
முன்புற நாக்குத் தடித்து மேல்வாய்ப் பல்லின் அடியைப் பொருத்த ல
ஓசை பிறக்கும்.
முயல்க: வெல்லம், வேலை, தாலாட்டு, வல்லி
ளகரம் பலுக்குதல் ( உச்சரித்தல் )
முன்புற நாக்குத் தடித்து மேல்வாயின் முன்புறம் தடவ ள ஓசை பிறக்கும்.
முயல்க: குளம், வெள்ளம், வேளை, வேள், பள்ளி
ழகரம் பலுக்குதல் ( உச்சரித்தல் )
மேல்வாயை நாக்கின் நுனி தடவ ழ ஒலி பிறக்கும்
முயல்க: வாழ்க, பழம், சூழல்
ந, ன, ண ஒலி வேறுபாடு
தன்னகர, னன்னகர, ணகர வேறுபாடு
தன்னகரம் பலுக்குதல் (உச்சரிக்குதல்)
நுனி நாக்கு மேல்வாய்ப் பல்லின் அடியில் பொருந்துவதால் ந ஒலி பிறக்கும்
முயல்க: பெறுநர், நன்கை, நாக்கு
னன்னகரம் பலுக்குதல் (உச்சரிக்குதல்)
மேல்வாயை நாக்கின் நுனி மிகப் பொருந்த ன ஒலி பிறக்கும்
முயல்க: அன்னம், பன்னதல், வன்மை
ணகரம் பலுக்குதல் (உச்சரிக்குதல்)
நுனி நாக்கு மேல்வாயின் நடுவில் தொட ண ஒலி பிறக்கும்
முயல்க: அண்ணம், வண்ணம், கிண்ணம்
ர ற ஓசை பலுக்குதல் ( உச்சரித்தல்)
ரகரம் பலுக்குதல்
நக்கின் நுனி மேல்வாயின் முன் புறத்தைத் தொட ர ஒலி பிறக்கும்.
முயல்க: மரம், தகரம், பம்பரம்
றகரம் பலுக்குதல்
மேல்வாயின் நடுப்பாகத்தை நாக்கை வளைத்துத் தொட்டு உச்சரிக்க ற ஒலி பிறக்கும்
முயல்க: முற்றம், பற்று, மறம்