எழுவாய், பயனிலை
எழுவாய்
வாக்கியத்தில் கருத்துத் தொடங்கும் சொல் எழுவாய் ஆகும்.
எழுவாய் என்பதற்குத் தோன்றும் இடம் என்பது பொருள.;
எ-கா: குமரன் படிப்பில் திறமையுள்ளவன்
குமரன் - எழுவாய்
பயனிலை
வாக்கியத்தின் கருத்தை முடிக்கும் சொல் பயனிலை ஆகும்.
எ-கா: கபிலன் பாட்டுப் பாடினான்.
பாடினான் - பயனிலை
எழுவாயும் பயனிலையும்
எ-கா: மதிவண்ணணன் காலையில் எழுந்தான்.
மதிவண்ணன் - எழுவாய்
எழுந்தான் - பயனிலை
பெம்பாலும் எழுவாய்ச் சொல் வாக்கியத்தின் முதலில் வரும். ஆயினும், அது இடம் மாறி வருதலுமுண்டு.
எ-கா: காலையிலே கதிரவன் உதிக்கின்றான்.
கதிரவன் - எழுவாய்
பயனிலைச் சொல் பெரும்பாலும் வாக்கியத்தின் இறுதியிலே வரும். சில இடங்களில் மாறியும் வரும். புயனிலையை அறிந்தபின் பயனிலைச் சொல்லுடன் யார்? எது? எவை? முதலிய சொற்களில் ஏற்றதொன்றைச் சேர்த்து, வினவினால் எழுவாயை அறியலாம்.
எ-கா:
கலைமகள் ஓவியம் வரைந்தாள்
வரைந்தாள் என்னும் பயனிலையுடன் யார்? என்னும் வினாச் சொல்லைச் சேர்த்து, யார் வரைந்தாள்? என வினவினால் கலைமகள் என்பது விடையாக வரும். அதுவே எழுவாயாகும்.
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்
வாக்கியத்தில் எழுவாய் பயனிலை ஆகிய இரு உறுப்புகள் பற்றி முன்பு கற்றீகள். வாக்கியங்களில் எழுவாய் பயனிலையுடன் செயற்படுபொருள் என்றொரு உறுப்பும் இடம்பெறும்.
எ-கா: மங்கை எலுமிச்சம்பழச்சாற்றைப் பருகினாள். இந்த வாக்கியத்தின் பயனிலை பருகினாள். எதைப் பருகினாள்? என்ற வினாவுக்கு எலுமசை;சம்பழச்சாறு விடையாக வரும். எனவே, எலுமிச்சம்பழச்சாறு செயப்படுபொருளாகும்.