சனி, 13 மார்ச், 2010

திணை

திணை:

திணை என்பதற்கு வகை என்று பெருள்.
திணை இருவகைப்படும்

அவையாவன,
உயர்தினை, அஃறிணை

உயர்திணை:
மக்களைக் குறிக்கும் சொல் உயர்திணையாகும். மக்களை விட உயர்ந்தவராகக் கருதப்படும் தேவர்களும் உயர்திணையாகும்.

எ-கா: வேலன், குழலி, இறைவன்

அஃறிணை
மக்கள் அல்லாத உயிருள்ள, உயிரற்ற அனைத்தும் அஃறிணை ஆகும்.

எ-கா: மரம், கணினி, கோழி, கல்

பால்:

பால் என்பது திணையின் உட்பிரிவாகும்.

உயிர்திணையில் ஆணைக் குறிப்பது ஆண்பால்.

எ-கா: தலைவன், அவன், செல்வன், மாலன், மாணவன், சிறுவன்

உயிர்திணையில் பெண்ணைக் குறிப்பது பெண்பால் ஆகும்.

எ-கா: தலைவி, அவள், செல்வி, தங்கை, மாமி, கோதை, சிறுமி

ஆண் பெண் இருபாலாரிலும் பலரைக் குறிப்பது பலர்பால் எனப்படும்.

எ-கா: தலைவர்கள், அவர்கள், குறவர்கள், மாணவர்கள், நண்பர்கள்

அஃறிணையில் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி ஒன்றைக் குறிப்பது ஒன்றன்பால் எனப்படும்.

எ-கா: அது, நாய், கல், இலை, வீடு, மணிக்கூடு, கதவு, கப்பல்,

அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் எனப்படும்.

எ-கா: அவை, நாய்கள், கற்கள், இலைகள், வீடுகள், குதிரைகள்