பெயர்ச்சொல்
ஐம்புலன்களால் உணரக்கூடியதும் உள்ளத்தால் அறியக்கூடியதுமான பொருள்களைக் குறிப்பது பொயர்ச்சொல் எனப்படும். பேயர்ச்சொல் அறுவகைப்படும்.
அவையாவன:
பொருட்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
குணப்பெயர்
தொழிற்பெயர்
பொருட்பெயர்
ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் எனப்படும்.
எ-கா:
பெட்டகம், பந்து, கண்ணன், மரம், கோழி
இடப்பெயர்
இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்பெயர் எனப்படும்.
எ-கா
கண்டி, யாழ்ப்பாணம், பள்ளி, நூலகம்
காலப்பெயர்
காலத்தின் பெயரைக் குறிப்பது காலப்பெயர் எனப்படும்.
எ-கா:
செவ்வாய், இரவு, பகல், ஆண்டு, கோடை
சினைப்பெயர்
ஒன்றின் பகுதிப் பொருளை அல்லது உறுப்பைக் குறிப்பது சினைப்பெயர் எனப்படும்.
எ-கா:
கண், மூக்கு, வாய், தலை, வேர், பூ, இலை
குணப்பெயர்
ஒரு பொருளின் நிறம், சுவை, உணர்ச்சி, வடிவம், போன்றவற்றின் பண்புகளைக் குறிப்பது குணப்பெயர் எனப்படும்.
எ-கா:
அன்பு, நன்மை, புளிப்பு, இனிமை, வட்டம், கறுப்பு
தொழிற்பெயர்
தொழிலின் பெயரைக் குறிப்பது தொழிற்பெயர் எனப்படும்.
எ-கா
ஓடுதல், சிரித்தல், விளையாடுதல், படித்தல்