சனி, 19 டிசம்பர், 2009

கட்டுரை எழுதுக

கீழ்வருவனவற்றில் ஒன்றினைத் தெரிவு செய்து, தரப்பட்டிருக்கும் தரவுகளை வைத்து நூறு (100) சொற்களுக்குக் குறையாமல் ஒரு கட்டுரை எழுதுக.

அ. நான் விரும்பும் நாடு
நாட்டின்,
அழகு
பாதுகாப்பு
பொருளாதாரம்
வாழ்வாதாரம்
கல்விநிலை

ஆ. தமிழர் பண்பாடு

அறச்செயல்கள்
விழுமியங்கள்
மானம்
கணைக்கால் இரும்பொறை (மானம்)
குமணன் (கொடை)
ஒழுக்கம்

இ. நான் தமிழ் கற்கும் பள்ளி

என் பள்ளியின் பெயர்
சேர்ந்த ஆண்டு
கல்வி கற்கும் வகுப்பு
ஆசிரியர் மாணவர் தொகை
கற்கும் பாடங்கள்
தமிழ் கற்பதால் ஏற்படும் விருப்பு வெறுப்பு
தேர்வுகள்
நடைபெறும் விழாக்கள்

வினாக்களுக்கு முழுவிடை தருக

பந்தியை வாசித்து வினாக்களுக்கு முழுவிடை தருக.

முயற்சி

அவன் அழகன் தான். துன் பெயருக்கு ஏற்பவே அழகயன் தான். எல்லோரும் அவனது அழகினால் அவனுடன் அன்பாகப் பழகுவர். ஆனால், அவன் எதிலும் முயற்சி குறைந்தவன். பயனுள்ள செயல்களைச் செய்யாமல் வீண்பொழுது போக்குவான். படிப்பில் அக்கறை காட்டுவதில்லை. எந்நேரமும் விளையாடுவதிலும் தொலைக் காட்சி பார்ப்பதிலும் ஆர்வம் காட்டுவான். அழகன் படிப்பில் திறமைக் குறைவாக இருப்பதைக் கண்டு பெற்றோர் கவலைப்பட்டனர்@ அன்போடு அவனுக்கு அறிவுரைகள் கூறினர்@ சிலவேளைகளில் கண்டிக்கவும் செய்தனர். அது அழகனுக்கு மிகுந்த மனத்துயரை அளித்தது. ஆசிரியர் பாடம் கற்பிக்கும் போது முயற்சியின் பயனை விளக்கினார். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்று மனதில் பதியும்படி தெளிவாக விளக்கினார். அன்றிலிருந்து அழகன் விடாமுயற்சியுடன் படித்தான். அந்த ஆண்டு வகுப்பில் முதலாவதாகத் தேர்ச்சி அடைந்தான். அன்றுதான் அவன் கல்வியிலும் அழகன் என்ற பாராட்டைப் பெற்று அக மகிழ்ந்தான்

1. அழகன் மீது பிறர் அன்பாய் இருந்ததற்குக் கரணியம் என்ன?

2. அழகன் படிப்பில் திறமைக் குறைவாய் இருந்தது எதனால்?

3. அழகன் உண்மையாக மகிழ்ந்தது எப்போது?

4. பெற்றோர் அழகனைத் திருத்துவதற்குக் கையாண்ட இரு வழிகள் எவை?

5. ஆசிரியர் அழகனுக்குக் கூறிய பழமொழி யாது?

முழுவிடை தருக

பின்வரும் கேள்விகளுக்கு முழுவிடை தருக.1.பெயர் சொல் என்றால் என்ன? அவை எவை? ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்காட்டு (எ-கா) தருக?

2.இலக்கண அடிப்படையில் எண் எத்தனை வகைப்படும்? அவை எவை? ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்காட்டு (எ-கா) தருக?

3.தன்மை, முன்னிலை, படர்க்கை என்றால் என்ன? எடுத்துக்காட்டு (எ-கா) தருக?

4.பின்வரும் சொற்களுக்கு அதே பொருள் தரும் இரண்டு சொற்கள் தருக?

துன்பம் :__________________________________
கடல் :__________________________________
ஆசிரியர்:__________________________________
வானம் :__________________________________
தாய் :__________________________________

5.காலம் எத்தனை வகைப்படும்? எடுத்துக்காட்டுகளோடு விளக்குக?

6.துட்டகெமுனுவும் பௌத்தகுருமாரும் போருக்கான முழக்கமாக எதை முன்வைத்தனர்?

7.வீட்டுத்தோட்டத்தால் கிடைக்கும் நன்மைகள் மூன்று தருக?

8.நாட்டார் பாடல்கள் என்றால் என்ன? அப்பாடல்கள் எவ்வகையான நிகழ்வுகளில் பாடப்படுகின்றன?

9.கணைக்கால் இரும்பொறையின் மான உணர்வை விளக்கும் நிகழ்ச்சி யாது?

10.எழில் கொஞ்சும் மயிலாடுமலை எப்படிக் காட்சியளிக்கும்.

பொருத்தமான சொல்லை இடுக

சரியான பதிலை இடைவெளியில் எழுதி சொல்லியத்தை நிறைவு செய்க.

1.தமிழர் தம் _____________ நாளாக தைப்பொங்கலைக் கொண்டாடுவர.

( திரு, திறு )

2.தமிழ்ப் _____________ உலத்தில் சிறந்ததாக போற்றப்படுகிறது.

( பண்பாடு, பன்பாடு )

3.___________ ஊற்றியதால் பயிர்கள் நன்றாக வளர்ந்தன.

( நீரை, நீறை )

4.சிறுவர்கள் கடற் ________________ பந்தடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

( கறையில், கரையில் )

5.தமிழீழத் தேசிய தலைவர் தமிழர் ___________ நிலை நாட்டினார்.

( மரபை, மறபை )

6._____________ தவறியதால் கண்ணகி சினந்து தன் காற்சிலம்பை உடைத்தாள்.

( அரம், அறம் )

7.தமிழன் என்றோர் இனமுண்டு என்ற பாடலை_______________ கவிஞர் எழுதினார்.

( நாமக்கள், நாமக்கல் )

8.ஆற்றிலுள்ள கெண்டை _______________ துள்ளிக் குதிப்பதைப் பார்க்க மகிழ்வாக இருந்தது.

( மீண்கள், மீன்கள் )

9.மழை பெய்ததால் வவுனியாவில் வெள்ளம் மக்களின் ______________ ஈரமாக்கியது.

( கூடாரங்களை, கூடாறங்களை )

10.திரு___________ பந்தலில் வாழைகளைக் கட்டினர்.

( மனப், மணப் )

கேள்விகளும் - பதில்களும்

பின்வருவம் கேள்விகளுக்கு சரியான விடையின் கீழ் கோடிடுக.

1.தமிழிலுள்ள முதலெழுத்துகள் எத்தனை?

1) 30 2) 216 3) 12 4) 18

2.ஒரே கருத்துள்ள இரண்டு சொற்கள் தருக?

1)துயில் 2) இன்பம் 3) உறக்கம் 4) துன்பம்

3.எல்லாளனுக்கான நினைவிடத்தை துட்டகெமுனு அமைத்த இடம் எது?

1) யாழ்பாணம் 2) கொழும்பு 3) கண்டி 4) அநுராதபுரம்

4.ஒழுக்கத்தால் சிறந்தவரைத் தமிழர் எவ்வாறு அழைப்பர்?

1) அறிவாளி 2) சான்றோர் 3) கெட்டிக்காரன் 4) புலவர்

5.குமணமன்னன் ஒரு

1) பாடகன் 2) வீரன் 3) வள்ளல் 4) புலவன்

6.ஆழமறியாமல் எதை விடாதே

1) தலையை 2) கையை 3) காலை 4) கண்ணை

7.பெயர்ச்சொல் வகைகள் எத்தனை?

1) இரண்டு 2) ஐந்து 3) மூன்று 4) ஆறு

8.நான்+ ஐ சேர்த்தால் வரும் வடிவம்

1) நானை 2) என்னை 3) நாங்களை 4) நான்ஐ

9.படித்தான் என்பதன் எதிர்கால வடிவம்

1) படித்துவிட்டான் 2) படிக்கிறான் 3) படிப்பான் 4) படிக்கவில்லை

10.உழவர்கள் என்போர்

1) வணிகம் செய்வோர் 2) பயிர்த்தொழில் செய்வோர்

3) வண்டி ஓட்டுவோர் 4) கப்பல் செலுத்துவோர்

11.பச்சை, நீலம், இனிப்பு, வட்டம் என்பன

1) குணப்பெயர் 2) சினைப்பெயர் 3) காலப்பெயர் 4) இடப்பெயர்

12.புலவர் பாடிப் பரிசு பெற்றார். இங்கே வந்துள்ள செயற்படுபொருள்

1) பரிசு 2) புலவர் 3) பெற்றார் 4) பாடி

13.உயிரைக்காட்டினும் மானமே பெரிதென எண்ணி உயிர்நீத்த மன்னன் யார்?

1) செங்குட்டுவன் 2) கரிகாலன் 3) கணைக்கால் இரும்பொறை

4) குமணன்

14.உயர்திணைக்குரிய பால்கள் எத்தனை?

1) 1 2) 4 3) 3 4) 5

15.முன்னிலை எனும் இடவகைக்கு ஓர் எடுத்துக்காட்டு

1) நீர் 2) அவர்கள் 3) நான் 4) நாங்கள்

16.கண்ணன் பந்தை அடித்தான். இங்கு கண்ணன் என்பது.

1) பயனிலை 2) எழுவாய் 3) செயற்படுபொருள் 4) ஒருமை

17.பயனிலைச் சொல்லுடன் யாரை? ஏதை? எவற்றை? ஏன்பவற்றுள் ஏதாவது ஒன்றை வினவினால் வருவது.

1) பயனிலை 2) எழுவாய் 3) வினைமுற்று
4) செயற்படுபொருள்

18.பல பயன்களைத் தருவதால் நாம் நன்கு பேணவேண்டிய விலங்கு

1) அரிமா 2) வரிக்குதிரை 3) ஆ(பசு) 4) ஒட்டகச்சிவிங்கி

19.இலக்கணத்தில் ஒரு பொருள் பன்மொழி என்பது

1) ஒரு பொருளைக் குறிக்கும் பலசொல் 2) பலமொழிகள்

3) பழமொழிகள் 4) பலபெயர்

20.ஒன்றின் பகுதிப்பொருளை அல்லது உறுப்பைக் குறிப்பது

1) பொருட்பெயர் 2) சினைப்பெயர் 3) இடப்பெயர்
4) தொழிற்பெயர்

21.பண்டாரவன்னியன் யாரோடு போர் புரிந்தான்

1) ஒல்லாந்தரோடு 2) போத்துக்கேயரோடு 3) ஆங்கிலேயரோடு 4) அல்பானியரோடு

22.அகம் புறம் என்று இலக்கியம் வகுத்தவர்

1) வடவர் 2) தமிழர் 3) சமணர் 4) ஆரியர்

23.அறுவடைசெய்யும் போது பாடப்படும் பாடல்

1) ஏர்பாட்டு 2) தாலாட்டு 3) சினிமாப்பாடல் 4) அறுவடைப்பாடல்

24.உள்ளத்தினின்று வெளிப்படும் பண்பட்ட இயல்பு

1) உளவியல் 2) பண்பாடு 3) உறவு 4) சிறப்பு

25.மனிதன், தேவர்கள் என்பன

1) உயர்திணை 2) அஃறிணை 3) வினைச்சொல்
4) பல்திணை

26.எல்லாளன் கட்டிய குளம்

1) இரணைமடுக்குளம் 2) பாவற்குளம் 3) வவுனிக்குளம்

4) கல்மடுக்குளம்

27.தமிழ்ச்செல்வம் ஆகமாட்டாயா என்ற பாடலில் தமிழ் இறைவனார் என்று குறிப்பிடப்படுபவர்

1) ஒளவையார் 2) திருவள்ளுவர் 3) பாரதியார் 4) காசியானந்தன்

28.வாக்கியத்தில் கருத்தை முடிக்கு சொல்

1) செயற்படுபொருள் 2) எழுவாய் 3) பயனிலை 4) வினையெச்சம்

29.மயிலாடுமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை முதலில் கவர்வது

1) மணிக்கூடு 2) கோபுரம் 3) மரநிழல் 4) நெற்பயிர்கள்

30.மூட ஆமை என்பது

1) ஊனமுள்ள ஆமை 2) பெரிய ஆமை 3) அறிவற்ற ஆமை

4) நன்றியுள்ள ஆமை

சனி, 7 நவம்பர், 2009

இனங்கள்

வல்லினம்:க,ச,ட,த,ப,ற

மெல்லினம்:ங,ஞ,ண,ந,ம,ன

இடையினம்:ய,ர,ல,வ,ழ,ள

சனி, 24 அக்டோபர், 2009

எழுத்துகளை அறிவோம்

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள

சனி, 4 ஏப்ரல், 2009

வண்ணம் தீட்டுவோம்

வண்ணத்துப்பூச்சி பறக்குது பார்.

சனி, 21 மார்ச், 2009

புதன், 25 பிப்ரவரி, 2009

tamil

thamizh is ours