சனி, 13 மார்ச், 2010

எழுத்து

எழுத்து

பேசும்போது ஒலிவடிவாகவும் எழுதும் போது வரிவடிவாகவும் மொழி அமையும். தமிழ் எழுத்துகளை முதலெழுத்து சார்nhழுத்து என இரண்டாக வகைப்படுத்துவர்.

முதலெழுத்து

முதலெழுத்த என்பது தமிழ்மொழியில் வழங்கும் அடிப்படையான ஒலிகளையும் அவற்றின் வரிவடிவங்களையும் குறிக்கும் எழுத்தகளாகும்.

துமிழ்மொழியிலுள்ள முதலெழுத்தகள் முப்பது ஆகும்.
அவையாவன:

உயிரெழுத்துகள் - 12
மெய்யெழுத்தகள் - 18

உயிரெழுத்துகள்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள

என்னும் பன்னிரண்டு எழுத்துகளும் உயிரெழுத்துகள் ஆகும்.

உயிரெழுத்துகள் இருவகைப்படும்.

குற்றெழுத்துகள் - 5 (குறில்)
நெட்டெழுத்துகள் - 7 (நெடில்)

குற்றெழுத்துகள்

அ, இ, உ, எ, ஒ என்பன குற்றெழுத்துகள் ஆகும்.
அவை ஒலிக்க எடுக்கும் கால அளவு ஒரு கைந்நொடிப் பொழுதாகும்.

நெட்டெழுத்துகள்
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்பன நெட்டெழுத்துகள் ஆகும். ஆவை ஒலிக்க எடுக்கும் கால அளவு இரண்டு கைநொடிப் பொழுதாகும்.

மெய்யெழுத்தகள்

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
என்னும் பதினெட்டு எழுத்துகளும் மெய்யெழுத்துகளாகும். மெய்யெழுத்துகளுக்கு உடலெழுத்துகள் அல்லது ஒற்றெழுத்துகள் என்னும் பெயர்களும் உண்டு.


மெய்யெழுத்துகள் மூன்று வகைப்படும்.

வல்லெழுத்துகள் - 6 – வல்லினம்
மெல்லெழுத்துகள் 6 – மெல்லினம்
இடையினம் - 6 - இடையினம்

வல்லினம்

க் ச் ட் த் ப் ற் என்பன வலிமையாக ஒலித்தலால் வல்லின எழுத்துகள் எனப்படும்

மெல்லினம்

ங் ஞ் ண் ந் ம் ன் என்பன மென்மையாக ஒலித்தலால் அமல்லின எழுத்துகள் எனப்படும்.

இடையினம்

ய் ர் ல் வ் ழ் ள் என்பனவற்றின் வல்லொலியாகவும் இன்றி மெல்லொலியாகவும் இன்றி இடையில் ஒலித்தலால் இடையின எழுத்துகள் எனப்படும்.

சார்பெழுத்து

உயிரெழுத்துகள் பன்னிரண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டும் ஒன்றுடன் ஒன்று புணர்ந்து இருநூற்றுப்பதினாறு உயிர்மெய்யெழுத்துகள் உருவாகும். ஊயிர்மெய்யெமுத்துகளும் ஆய்த எழுத்தும் சார்பெழுத்துகள் ஆகும்.

பலுக்குதல் ( உச்சரித்தல் )

ல, ள, ழ ஒலி வேறுபாடு

லகர, ளகர, ழகர வேறுபாடு

லகரம் பலுக்குதல் ( உச்சரித்தல் )

முன்புற நாக்குத் தடித்து மேல்வாய்ப் பல்லின் அடியைப் பொருத்த ல
ஓசை பிறக்கும்.

முயல்க: வெல்லம், வேலை, தாலாட்டு, வல்லி


ளகரம் பலுக்குதல் ( உச்சரித்தல் )

முன்புற நாக்குத் தடித்து மேல்வாயின் முன்புறம் தடவ ள ஓசை பிறக்கும்.

முயல்க: குளம், வெள்ளம், வேளை, வேள், பள்ளி


ழகரம் பலுக்குதல் ( உச்சரித்தல் )

மேல்வாயை நாக்கின் நுனி தடவ ழ ஒலி பிறக்கும்

முயல்க: வாழ்க, பழம், சூழல்

ந, ன, ண ஒலி வேறுபாடு

தன்னகர, னன்னகர, ணகர வேறுபாடு

தன்னகரம் பலுக்குதல் (உச்சரிக்குதல்)

நுனி நாக்கு மேல்வாய்ப் பல்லின் அடியில் பொருந்துவதால் ந ஒலி பிறக்கும்

முயல்க: பெறுநர், நன்கை, நாக்கு


னன்னகரம் பலுக்குதல் (உச்சரிக்குதல்)

மேல்வாயை நாக்கின் நுனி மிகப் பொருந்த ன ஒலி பிறக்கும்

முயல்க: அன்னம், பன்னதல், வன்மை


ணகரம் பலுக்குதல் (உச்சரிக்குதல்)

நுனி நாக்கு மேல்வாயின் நடுவில் தொட ண ஒலி பிறக்கும்

முயல்க: அண்ணம், வண்ணம், கிண்ணம்

ர ற ஓசை பலுக்குதல் ( உச்சரித்தல்)

ரகரம் பலுக்குதல்

நக்கின் நுனி மேல்வாயின் முன் புறத்தைத் தொட ர ஒலி பிறக்கும்.

முயல்க: மரம், தகரம், பம்பரம்


றகரம் பலுக்குதல்

மேல்வாயின் நடுப்பாகத்தை நாக்கை வளைத்துத் தொட்டு உச்சரிக்க ற ஒலி பிறக்கும்

முயல்க: முற்றம், பற்று, மறம்

தனிவாக்கியம்,தொடர் வாக்கியம்

தனிவாக்கியம்

ஓர் எழுவாயின் முற்றுப்பெற்ற ஒரேடியாரு செயலை மாத்திரம் கூறும் வாக்கியம் தனிவாக்கியமாகும்.
எ-கா:
1. அ) கிளி மாமரத்தில் இருந்தது
ஆ) கிளி மாம்பழத்தைக் கொத்தியது

2. அ) உழவர்கள் வயலை உழுதார்கள்.
ஆ) உழவர்கள் நெல்லை விதைத்தார்கள்.
இ) உழவர்கள் விளைந்த நெல்லை அறுவடை செய்தார்கள்.

தொடர் வாக்கியம்

தனித்தனியாக இயங்கக் கூடிய ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள், பல குறைவினைகளையும் ஒரு வினைமுற்றையும் கொண்டு முடிவது தொடர்வாக்கியமாகும்.
எ-கா:
1. கிளி மாமரத்திலிருந்து மாம்பழத்தைக் கொத்தியது.

2. உழவர்கள் வயலை உழுது, நெல்லை விதைத்து, விளைந்த நெல்லை அறுவடை செய்தார்கள்.

வாக்கிய வகைகள் ( கூற்று, வினா )

வாக்கிய வகைகள் ( கூற்று, வினா )

கூற்று வாக்கியம்

செய்தியைக் கூறும் நோக்குடன் அல்லது ஓர் உண்மையை உறுதிப்படுத்திக் கூறும் நோக்குடன் அமைவது கூற்று வாக்கியமாகும்.
எ-கா:
1.குமரன் சந்தைக்குச் சென்றான்
2.நேற்று முழுவதும் மழை பெய்தது.

வினா வாக்கியம்
ஒரு கருத்தை அல்லது ஒரு நிகழ்வை அறியும் நோக்குடன் வினவுவதாக அமைவது வினா வாக்கியமாகும்.
எ-கா:
1.இன்று வீட்டுக்கு வருவாயா?
2.உங்கள் ஊரில் தைப்பொங்கல் விழா நடந்ததா?

சேர்த்தெழுதல், பிரித்தெழுதல்

சேர்த்தெழுதல், பிரித்தெழுதல்

சேர்த்தெழுதல்

எ-கா:

தமிழ் + பாட்டு = தமிழ்ப்பாட்டு
தமிழ் + ஆர்வம் = தமிழார்வம்
இருநூறு + ஐம்பது = இருநூற்றைம்பது
பால் + சோறு = பாற்சோறு
இடை + இடையே = இடையிடையே
வெண்மை + நிறம் = வெண்ணிறம்

பிரித்தெழுதல்

எ-கா:
கடுங்குளிர் = கடுமை + குளிர்
மறைவிடம் = மறைவு + இடம்
ஒவ்வொன்று = ஒன்று + ஒன்று
ஆற்றங்கரை = ஆறு + கரை

வினைச்சொல் காலங் காட்டுதல்

வினைச்சொல் காலங் காட்டுதல்

வினைச்சொல் செயலை உணர்த்தும். வினைமுற்றுகள் பெரும்பாலும் இடைநிலைகளால் காலங் காட்டும். விகுதியாலும், பகுதி இரட்டித்தும் காலங் காட்டுவதுமுண்டு. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எனக் காலம் மூன்று வகைப்படும்.

இறந்தகாலம் - இதன் இடைநிலைகள் ட், த், ற், இன், ன்

எ-கா:
உண்டான் - உண் - ட் - ஆன்
செய்தான் - செய் - த் - ஆன்
கற்றாள் - கல் - ற் - ஆள்
ஓடின – ஓடு - இன் - அ
போனான் - போ – ன் - ஆள்

நிகழ்காலம் - இதன் இடைநிலைகள் கிறு, கின்று, என்பனவாகும்.
எ-கா:
செய்கிறாள் - செய் - கிறு – ஆள்
உண்கின்றாள் - உண் - கின்று – ஆள்

எதிர்காலம் - இதன் இடைநிலைகள் ப், வ் என்பனவாகும்.
எ-கா:
உண்பான் - உண் - ப் - ஆன்
செய்வான் - செய் - வ் - ஆன்

வினைமுற்றுகள் யாவும் மூன்று காலங்களுக்கும் உரியனவாய் உள்ளன. சிறுவர்கள் பாட்டுப் பாடினார்கள், சிறுவர்கள் பாட்டுப் பாடுகின்றார்கள், சிறுவர்கள் பாட்டுப் பாடுவார்கள் எனும் போது, பாடு என்னும் வினையடியிலிருந்து பிறக்கும் வினைமுற்றுகள் மூன்று காலங்களிலும் வந்துள்ளமையை அறியலாம்.

வினைச்சொற்கள்

வினைச்சொற்கள்

வினைச்சொல்

ஒரு பொருளை உணத்துவது பெயர்ச்சொல். ஆப்பொருளின் செயலை உணத்துவது வினைச்சொல் ஆகும். அது காலத்தைக் காட்டும்;@ திணை, பால், எண், இடம், ஆகியவற்றைத் தெரிவிக்கும்

எ-கா:

நடந்தான், நின்றார்கள், அறிவார், வந்தன, படித்தாள், கூடின, நினைத்தேன், வருவாய்

காலம்

காலம் மூன்று வகைப்படும்.

அவையாவன:

இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்

இறந்தகாலம்
நிகழ்ந்து முடிந்த செயலைக் குறிப்பது இறந்தகாலம் எனப்படும்.
எ-கா:
ஓடினான், நடந்தான், படித்தனர், குடித்தது

நிகழ்காலம்
நிகழ்ந்து கொண்டிருக்கும் செயலைக் குறிப்பது நிகழ்காலம் எனப்படும்.
எ-கா:
ஓடுகின்றாள், நடக்கினு;றான், படிக்கின்றனர், குடிக்கின்றது

எதிர்காலம்
இனிமேல் நிகழவிருக்கும் செயலைக் குறிப்பது எதிர்காலம் எனப்படும்.
எ-கா:
ஓடுவாள், நடப்பான், படிப்பர், குடிக்கும்

பெயர்ச்சொல்

பெயர்ச்சொல்

ஐம்புலன்களால் உணரக்கூடியதும் உள்ளத்தால் அறியக்கூடியதுமான பொருள்களைக் குறிப்பது பொயர்ச்சொல் எனப்படும். பேயர்ச்சொல் அறுவகைப்படும்.

அவையாவன:

பொருட்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
குணப்பெயர்
தொழிற்பெயர்

பொருட்பெயர்
ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் எனப்படும்.
எ-கா:
பெட்டகம், பந்து, கண்ணன், மரம், கோழி

இடப்பெயர்
இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்பெயர் எனப்படும்.
எ-கா
கண்டி, யாழ்ப்பாணம், பள்ளி, நூலகம்

காலப்பெயர்
காலத்தின் பெயரைக் குறிப்பது காலப்பெயர் எனப்படும்.
எ-கா:
செவ்வாய், இரவு, பகல், ஆண்டு, கோடை

சினைப்பெயர்
ஒன்றின் பகுதிப் பொருளை அல்லது உறுப்பைக் குறிப்பது சினைப்பெயர் எனப்படும்.
எ-கா:
கண், மூக்கு, வாய், தலை, வேர், பூ, இலை

குணப்பெயர்
ஒரு பொருளின் நிறம், சுவை, உணர்ச்சி, வடிவம், போன்றவற்றின் பண்புகளைக் குறிப்பது குணப்பெயர் எனப்படும்.
எ-கா:
அன்பு, நன்மை, புளிப்பு, இனிமை, வட்டம், கறுப்பு

தொழிற்பெயர்
தொழிலின் பெயரைக் குறிப்பது தொழிற்பெயர் எனப்படும்.
எ-கா
ஓடுதல், சிரித்தல், விளையாடுதல், படித்தல்

ஒரு பொருட் பன்மொழி

ஒரு பொருட் பன்மொழி

ஒரு பொருளைத் தரும் பல சொற்கள் ஒரு பொருட் பன்மொழி எனப்படும். அதாவது பல சொற்கள் ஒரு பொருளைக் குறிப்பதாகும்.

எ-கா:

பொழில், பொதும்பர், கா என்ற சொற்கள் மூன்றும் சோலை என்னும் ஒரு பொருளைக் குறிப்பதாகும்.

வீடு - இல்லம், உறையுள், மனை
இன்பம் - உவகை, மகிழ்ச்சி, களிப்பு
அழகு – அணி, வடிவு, வனப்பு, எழில், கவின்
துயில் - துஞ்சல், உறக்கம், தூக்கம்
கதிரவன் - வெய்யோன், பகலவன், ஞாயிறு, பரிதி
நிலா – மதி, திங்கள், அம்புலி

பல பொருள் தரும் ஒரு சொல்

ஒரு சொல் பல பொருளையோ அல்லது கருத்தையோ தரலாம். இத்தைய சொல் பல பொருள் ஒரு மொழி எனப்படும்.

எ-கா:

அகம் - வீடு, உள்ளம்
ஆறு – நதி, வழி, ஒழுக்கம், ஓரெண்
வாரணம் - யானை, சேவல், சங்கு
மா – மாமரம், குதிரை, விலங்கு, பெரிய
விடை – பதில், எருது

அகம் என்னும் சொல் வீடு, உள்ளம் போன்ற பல பொருளைத் தருகிறது. அதாவது ஒரு சொல் பல பொருளைத் தருகின்றது.

எழுவாய், பயனிலை

எழுவாய், பயனிலை

எழுவாய்

வாக்கியத்தில் கருத்துத் தொடங்கும் சொல் எழுவாய் ஆகும்.
எழுவாய் என்பதற்குத் தோன்றும் இடம் என்பது பொருள.;

எ-கா: குமரன் படிப்பில் திறமையுள்ளவன்
குமரன் - எழுவாய்

பயனிலை
வாக்கியத்தின் கருத்தை முடிக்கும் சொல் பயனிலை ஆகும்.

எ-கா: கபிலன் பாட்டுப் பாடினான்.
பாடினான் - பயனிலை

எழுவாயும் பயனிலையும்

எ-கா: மதிவண்ணணன் காலையில் எழுந்தான்.
மதிவண்ணன் - எழுவாய்
எழுந்தான் - பயனிலை

பெம்பாலும் எழுவாய்ச் சொல் வாக்கியத்தின் முதலில் வரும். ஆயினும், அது இடம் மாறி வருதலுமுண்டு.

எ-கா: காலையிலே கதிரவன் உதிக்கின்றான்.
கதிரவன் - எழுவாய்

பயனிலைச் சொல் பெரும்பாலும் வாக்கியத்தின் இறுதியிலே வரும். சில இடங்களில் மாறியும் வரும். புயனிலையை அறிந்தபின் பயனிலைச் சொல்லுடன் யார்? எது? எவை? முதலிய சொற்களில் ஏற்றதொன்றைச் சேர்த்து, வினவினால் எழுவாயை அறியலாம்.

எ-கா:

கலைமகள் ஓவியம் வரைந்தாள்
வரைந்தாள் என்னும் பயனிலையுடன் யார்? என்னும் வினாச் சொல்லைச் சேர்த்து, யார் வரைந்தாள்? என வினவினால் கலைமகள் என்பது விடையாக வரும். அதுவே எழுவாயாகும்.

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்

வாக்கியத்தில் எழுவாய் பயனிலை ஆகிய இரு உறுப்புகள் பற்றி முன்பு கற்றீகள். வாக்கியங்களில் எழுவாய் பயனிலையுடன் செயற்படுபொருள் என்றொரு உறுப்பும் இடம்பெறும்.

எ-கா: மங்கை எலுமிச்சம்பழச்சாற்றைப் பருகினாள். இந்த வாக்கியத்தின் பயனிலை பருகினாள். எதைப் பருகினாள்? என்ற வினாவுக்கு எலுமசை;சம்பழச்சாறு விடையாக வரும். எனவே, எலுமிச்சம்பழச்சாறு செயப்படுபொருளாகும்.

எண்

எண்:
எண்ணிக்கை அடிப்படையில் எண் ஒருமை, பன்மை என இருவகைப்படும்.

ஒருமை:
ஒன்றை, ஒருவரைக் குறிப்பது ஒருமை.

எ-கா: பூனை, பூ, மலை, அது, சிறுவன், ஓவியன், தோழி

பன்மை:

எ-கா: பூனைகள், பூக்கள், மலைகள், அவை, சிறுவர்கள், ஓவியர்கள்

இடம்:
தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் நிலைகள் இடவகைகள் ஆகும்.

தன்மை
தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் குறிப்பது தன்மை இடம்.

எ-கா: நான், யான், நாம், யாம், நாங்கள்

முன்னிலை
முன் நிற்பவரைக் குறிப்பது முன்னிலை இடம்.

எ-கா: நீ, நீர், நீயிர், நீவிர், நீங்கள்

படர்க்கை:
தன்மை முன்னிலை நீங்கிய மற்றையவை படர்க்கை இடம்.

எ-கா: அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, பொன், மன்னன், சேவல்

திணை

திணை:

திணை என்பதற்கு வகை என்று பெருள்.
திணை இருவகைப்படும்

அவையாவன,
உயர்தினை, அஃறிணை

உயர்திணை:
மக்களைக் குறிக்கும் சொல் உயர்திணையாகும். மக்களை விட உயர்ந்தவராகக் கருதப்படும் தேவர்களும் உயர்திணையாகும்.

எ-கா: வேலன், குழலி, இறைவன்

அஃறிணை
மக்கள் அல்லாத உயிருள்ள, உயிரற்ற அனைத்தும் அஃறிணை ஆகும்.

எ-கா: மரம், கணினி, கோழி, கல்

பால்:

பால் என்பது திணையின் உட்பிரிவாகும்.

உயிர்திணையில் ஆணைக் குறிப்பது ஆண்பால்.

எ-கா: தலைவன், அவன், செல்வன், மாலன், மாணவன், சிறுவன்

உயிர்திணையில் பெண்ணைக் குறிப்பது பெண்பால் ஆகும்.

எ-கா: தலைவி, அவள், செல்வி, தங்கை, மாமி, கோதை, சிறுமி

ஆண் பெண் இருபாலாரிலும் பலரைக் குறிப்பது பலர்பால் எனப்படும்.

எ-கா: தலைவர்கள், அவர்கள், குறவர்கள், மாணவர்கள், நண்பர்கள்

அஃறிணையில் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி ஒன்றைக் குறிப்பது ஒன்றன்பால் எனப்படும்.

எ-கா: அது, நாய், கல், இலை, வீடு, மணிக்கூடு, கதவு, கப்பல்,

அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் எனப்படும்.

எ-கா: அவை, நாய்கள், கற்கள், இலைகள், வீடுகள், குதிரைகள்