பந்தியை வாசித்து வினாக்களுக்கு முழுவிடை தருக.
முயற்சி
அவன் அழகன் தான். துன் பெயருக்கு ஏற்பவே அழகயன் தான். எல்லோரும் அவனது அழகினால் அவனுடன் அன்பாகப் பழகுவர். ஆனால், அவன் எதிலும் முயற்சி குறைந்தவன். பயனுள்ள செயல்களைச் செய்யாமல் வீண்பொழுது போக்குவான். படிப்பில் அக்கறை காட்டுவதில்லை. எந்நேரமும் விளையாடுவதிலும் தொலைக் காட்சி பார்ப்பதிலும் ஆர்வம் காட்டுவான். அழகன் படிப்பில் திறமைக் குறைவாக இருப்பதைக் கண்டு பெற்றோர் கவலைப்பட்டனர்@ அன்போடு அவனுக்கு அறிவுரைகள் கூறினர்@ சிலவேளைகளில் கண்டிக்கவும் செய்தனர். அது அழகனுக்கு மிகுந்த மனத்துயரை அளித்தது. ஆசிரியர் பாடம் கற்பிக்கும் போது முயற்சியின் பயனை விளக்கினார். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்று மனதில் பதியும்படி தெளிவாக விளக்கினார். அன்றிலிருந்து அழகன் விடாமுயற்சியுடன் படித்தான். அந்த ஆண்டு வகுப்பில் முதலாவதாகத் தேர்ச்சி அடைந்தான். அன்றுதான் அவன் கல்வியிலும் அழகன் என்ற பாராட்டைப் பெற்று அக மகிழ்ந்தான்
1. அழகன் மீது பிறர் அன்பாய் இருந்ததற்குக் கரணியம் என்ன?
2. அழகன் படிப்பில் திறமைக் குறைவாய் இருந்தது எதனால்?
3. அழகன் உண்மையாக மகிழ்ந்தது எப்போது?
4. பெற்றோர் அழகனைத் திருத்துவதற்குக் கையாண்ட இரு வழிகள் எவை?
5. ஆசிரியர் அழகனுக்குக் கூறிய பழமொழி யாது?